புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
அகறல் |
அகன்றுபோதல், நீங்கிப்போதல் |
அதிசாரம் |
உஷ்ணபேதி புளியங்கொட்டைத்தோல் தென்னம்பாளை. அதிசாரபேதி அதிசாரவக்கிரம் தேன் சிறுகாய்ஞ்சொறி இருபூலா வறட் பூலா நீர்ப்பூலா சாதிக்காய் நீர் முள்ளிவிதை முத்தக்காசு குங்கிலியம் காட்டாத்திப்பூ கிராம்பு. கருங்கா லிப்பிசின் ஆவிரை புளியம்வேர் வாழை வெள்ளிலோத்திரம் மா துளம்பிஞ்சு கருவேல் |
அதிராத்திரம் |
யாகம் |
அடுக்குப்பெட்டி |
பனையோலையால் இழைக்கப்படும் சிறிய பெட்டித் தொகுதிகள். ஒன்றுக்குள் ஒன்று வைக்கக்கூடியதாக இவை அமைகின்றன.பெரும்பாலும் சமையலறை உபகரணமாகப் பயன்படுகிறது.வெங்காயம் மிளகாய் உப்பு மல்லி சீரகவகை போன்றவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடியதாக இது இருக்கிறது. மூன்று தொடக்கம் ஆறு வரையிலான பெட்டிகள் ஓர் அடுக்குப் பெட்டியிற் காணப்படும். பெரிய பெட்டிகளிலும் அடுக்குப் பெட்டி இழைக்கப்படுவதுண்டு. |
அருந்தகம் |
மென்பானவகை அருந்திச் செல்லக் கூடிய இடம் |
அதிட்டம் |
மிளகு |
அமுத விழா |
80 ஆண்டுகள் |
அத்துவைதம் |
ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல ஒன்றே எனக்கூறும் கொள்கை. இரண்டன்மை அல்லிருமை அத்வைதம் |
அளகு |
பெண் மயில் |
அதிஷ்டானம் |
அதிட்டானம் நியமம் |
அதிஷ்டி |
நிலைப்பட ஆவிர்ப்பலிக்க ஆவாகனமாக(உப, 163, 164, 197, 25.) விக்கிரகங்கடவுளாலதிஷ்டிக்கப்பட்டது விக்கிரகத்திற்சுவாமியதிஷ்டித்தார் |
அகச் சமயம் |
சைவ சமயத்தின் உட் பிரிவுகள் பாடாண வாதம் பேத வாதம் சிவ சமய வாதம் சிவ சங்கிராந்த வாதம் ஈசுர அவிகார வாதம் சிவாத்துவிதம் |
அண்ணாவியார் |
பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர் |
அவனிகை |
திரை, இடுதிரை |
அல்லங்காடி |
அல்(இரவு) + அங்காடி |