யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
---மகாகவி திரு.சுப்பிரமணிய பாரதியார்
இத்தளம் முழுக்க முழுக்க தமிழில் எழுத்து வடிவில் அமைக்க எண்ணமுடன் துவங்கப்பட்ட இணையம் ஆகும். தமிழில் அமைந்தால் மட்டுமே போதுமா ?. இல்லை. ஆயினும் இத்தளம் தமிழில் தகவல்களை அறியும் நோக்கோடு கூகிள் தளத்தில் தேடுபவருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் துவங்கப்பட்டதாகும்.
தமிழ் வடிவில் சில பக்கங்கள் இல்லாவிடினும், இனிவரும் பதிவுகள் தமிழில் அமையும் என்கின்ற நம்பிக்கையில் தமிழ்காட்.ஆர்கு உலா வருகின்றது. இந்த இணையதளத்தில் காணப்படும் பெரும்பாலானச் செய்திகள் (இடுகைகள்) யாவும் வலைதளத்தில் தேடல் மேற்கொண்டு படித்து தெரிந்துகொண்ட பின்னர் (எனது பொழுதுபோக்கு) வெளியிடப்பட்டவை ஆகும்.
இது தனி நபருக்குச் சொந்தமான வலைப்பதிவுகளை கொண்ட இணையதளம் ஆகும். நீங்கள் ஏதேனும் பிழையோ தவறோ கண்டறிந்தால் தயவு செய்து cleandcom@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.